பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2013

"இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேர
இனப்படுகொலையை நிகழ்திய சிறிலங்கா அதிபர் ராசபக்சேவை தண்டிக்கக்கோரியும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் 5000ற்கு மேற்பட்ட
மாணவர்கள் திரண்டு பிரமாண்ட பேரணியை நடத்தியுள்ளார்கள். ஈழத்தில் நீதி மறுக்கப்பட்டுவரும் தமிழீழ மக்களிற்கு ஆதரவான போராட்டங்கள் தமிழக மாணவசகோதரர்களால் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்ட வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் தம்மை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவருகின்ற கொதிநிலையில் கல்லூரி நிர்வாகங்கள் சுயமாகவும் காவல்துறை உளவுத்துறை அரசியல் கட்சிகளின் கடுமையான அழுத்தங்களிற்கு உட்பட்டும் மாணவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதியை மறுத்துவருகின்றது

அதனையும் மீறி தமது நிலையில் உறுதியாக நிற்கும் மாணவர்களிற்கு தொடர்நது கல்வி கற்றலிற்கான அனுமதியை ரத்துச் செய்வதாகவும் மிரட்டிவருவதன் காரணமாக மாணவர்கள் வலிந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கவைக்கப்பட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள மாணவர்கள் ஒன்றிணைந்து அதே கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்கள். இந்த பேரணியில் 5000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள்.