பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2013


மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக ஜெனீவாவில் 62 இலங்கையர்கள்
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் மகிந்த தலைமையிலான இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 62  இலங்கைப் பிரதிநிதிகள் அங்கு சென்றுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
மேலும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அங்கத்தவர்களும்  இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிறுத்த வேண்டுமென தொடர்ச்சியாக அங்கு வலியுறுத்தி வருகின்றனர் என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தேசப்படத்தில் மூன்றில் இரண்டு பகுதி தமிழீழ இராச்சியத்துக்குச் சொந்தமானது என்பதனைக் காட்டும் வரைபடங்கள் கூட அங்கு காட்சிப்படுத்தப்பட்டன.
இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை வலியுறுத்துவோர் மத்தியில் சிங்களவர்களும் காணப்படுகின்றனர் என்றும் அந்தச் செய்திகள் மேலும் கூறுகின்றன.