பக்கங்கள்

பக்கங்கள்

14 மார்., 2013


பாடசாலை சீருடையில் மாணவி இளைஞரோடு கைதானார் 
யாழில் இளைஞன் ஒருவருடன் வீட்டில் தங்கியிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் குறித்த இளைஞரும் கோப்பாய் பொலிசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவி, பாடசாலை செல்லாமல் பாடசாலை சீருடையுடன் இளைஞர் ஒருவருடன் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளையே கைது செய்யப்பட்டுள்ளார். யாழில் இதுபோன்ற வாடி வீடுகளை பலர் 1 நாள் வாடகைக்கு விட்டு வருகிறார்கள். லாட்ஜ் என்ற பெயரில் இவ்வாறு பல சமுதாயச் சீர்கேடுகள் நடைபெற்று வருகிறது. 

மேற்குறிப்பிட்ட இருவரும் இவ்வாறு ஒரு வாடி வீட்டுக்குச் செல்வதைப் பார்த்த நபர் ஒருவரே பொலிசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.