பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2013


இலங்கைத் தமிழர்களை ஜெயலலிதாவால் காப்பாற்ற முடியாது என்றார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன்.
தில்லி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தபோது அவர் கூறியது...

அரசியல் விளையாட்டுக்காகத்தான் அவர் எல்லாவற்றையும் செய்கிறார். இந்த அரசால், தன் சொந்த நாட்டில் உள்ள தமிழர்களுக்கே சரியான பாதுகாப்பைக் கொடுக்க முடியவில்லை. அவரால் எப்படி தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற முடியும்? அவருக்கு இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் மீது ஒன்றும் அக்கறையில்லை; தமிழ்நாட்டில் அரசியலாக்குவதில்தான் அவருக்கு ஆர்வம் இருக்கிறது.
- என்றார் இளங்கோவன்.