பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013


ஆ.ராசா எழுத்து வடிவில் பதிலளிக்க பாராளுமன்ற கூட்டு குழு அனுமதி
 மத்திய அரசுக்கு  லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெ
க்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் புகார் வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற கூட்டு குழுவில் ஆஜராகி சாட்சியம் அளித்த மத்திய அரசின் தலைமை வக்கீல் ஜி.இ.வாஹன்வதி  ஆ.ராசாவுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினார். 
இதனை தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டு குழுவில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வாய்ப்பு அளிக்கும்படி, சபாநாயகர் மீராகுமாரிடம், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மனு கொடுத்தார். 
தற்போது இது தொடர்பாக ஆ.ராசா எழுத்து வடிவில் பதில் அளிக்க பாராளுமன்ற கூட்டு குழு அனுமதி அளித்துள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையை வருகிற மே மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.