பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013


எங்கள் பிள்ளைகளை விடுவியுங்கள்
எங்களுக்கு நீங்கள் தரும் எந்த உதவிகளும் வேண்டாம். காணாமல் போன எங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தந்தால் போதும் இவ்வாறு காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு மாநகரசபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பில் ஒருமித்துக் கோரிக்கை விடுத்தனர்.
 
அங்கு அவர்கள் மேலும் தெரிவித்ததாவது :
நாங்கள் காணாமல் போன எங்கள் பிள்ளைகளைக் கண்டறிந்து தருமாறு கோரி கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தவே கொழும்புக்கு வரவிருந்தோம். இருப்பினும் பொலிஸார் வவுனியாவில் எம்மைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.
 
அத்துடன் எங்களை ஏற்றிச்செல்ல வந்த பஸ்களின் சாரதிகளையும் அச்சுறுத்தி அவர்களைத் திருப்பியனுப்பினர்.
 
நாங்கள் எடுத்த முயற்சியைக் கைவிடாமல் வவுனியாவில் போராட்டம் நடத்தினோம்.
நாம் கேட்பதெல்லாம் ஒன்றேஒன்று தான். எங்களுக்கு உங்களது எந்த உதவிகளும் வேண்டாம். எங்களின் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தந்தாலே போதும் என்றனர்.