பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013


புதுவை: உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், புதுவையிலும் கடந்த 4 நாட்களாக சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.


உண்ணாவிரதம் இருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று போலீசாரால் வலுக்கட்டாயமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுவை காவல்துறையின் இதுபோன்ற காட்டுமிராண் டித்தனமான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மாணவர்களும் பொதுமக்களும் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர் என்று புதுவை போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.