பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2013


ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக விலகல்: மத்திய அமைச்சரவையில் இருந்தும் விலகல்: கலைஞர் அறிவிப்ப
 
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கலைஞர்,
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போகவிட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை. எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.