பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2013

வடக்கில் மாகாணசபையே இல்லையாம்

வடக்கு மாகாணசபை இன்னமும் சிறிலங்கா அதிபரால் பிரகடனப்படுத்தப்படாத நிலையில், அதற்கான தேர்தல் ஏற்பாடுகளைத் தம்மால் மேற்கொள்ள முடியாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

“வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ள போதிலும், தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் திணைக்களத்தினால் ஆரம்பிக்க முடியாதுள்ளது.

ஏனென்றால்,வடக்கு மாகாணசபையே இன்னமும் உருவாக்கப்படவில்லை.

2006ம் ஆண்டில் வடகிழக்கு மாகாணசபை பிரிக்கப்பட்ட பின்னர், கிழக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட்ட போது, கிழக்கு மாகாணசபையை உருவாக்கும் வர்த்தமானி அறிவித்தல் மட்டும் வெளியிடப்பட்டது.

கிழக்கு மாகாணசபையை உருவாக்கி, அதற்குத் தேர்தலை நடத்தும்படி தேர்தலை திணைக்களத்துக்கு உத்தரவிடும் வர்த்தமானியை சிறிலங்கா அதிபர் அப்போது வெளியிட்டிருந்தார்.

அதே நடைமுறை வடக்கு மாகாணசபைக்கும் பின்பற்றப்பட வேண்டும்.

எமக்கு இன்னமும் எந்த உத்தரவும் வரவில்லை.

தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ள எமக்கு 3 மாதங்கள் தேவை.

செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதானால் மே மாதம் எமக்கு சிறிலங்கா அதிபரின் உத்தரவு கிடைக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.