பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளது. 


இத் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பாகிஸ்தான் பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் சில அம்சங்களை நீக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் பாகிஸ்தான் தலையிடாது எனவும் இலங்கைக்குள் எது செய்வதென்றாலும் அதனை இலங்கையின் ஆதரவுடனேயே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 

இந்நிலையில் இலங்கைக்கு பாகிஸ்தான் தொடர்ந்தும் ஆதரவு வழங்கத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என பாகிஸ்தாக குறிப்பிட்டுள்ளது.