பக்கங்கள்

பக்கங்கள்

29 மார்., 2013


இலங்கை ஆட்டக்காரர்களை வெளியேற்றாவிட்டால் சன் குழுமம் அலுவலகம் முற்றுகை: மாணவர்கள் அறிவிப்பு!

முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்
என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் .இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது .
மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்
௧. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் கொள்ள வேண்டும் .
௨. இந்தியாவிலும் தமிழகத்திலும் உள்ள இலங்கை தூதரகத்தை உடனே மூட வேண்டும்
௩. இலங்கை மீது பொருளாதாரத் தடையை கொண்டு வர வேண்டும் .
௪. தமிழக முதல்வர் கூறியது போல் இந்தியா , இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் .
௫. ஐ.நா வின் மூலமாக இலங்கை மீது சர்வதேச இனப்படுகொலை விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பிற்கு இந்தியா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் .
௬. இந்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கைக்கு கொடுக்கும் ராணுவ , கடற்படை பயிற்சிகள் யாவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் . இலங்கை அரசுக்கு தொலை தொடர்பு ராடர் போன்ற சாதனங்களை கொடுத்து உதவுவதை நிறுத்த வேண்டும் .
௮. பாகிஸ்தான் உடனாக விளையாட்டு உறவை முறித்து போல் இலங்கை உடனாட விளையாட்டு உறவையும் முறித்துக் கொண்டு , இந்தியாவில் எங்கும் இலங்கை ஆட்டக் கார்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது .
இவ்வாறான கோரிக்கைகளை இன்று மாணவர்கள் இந்திய அரசுக்கு முன்வைத்தனர்482324_324193151016357_1581711067_n