பக்கங்கள்

பக்கங்கள்

16 மார்., 2013


ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம்


ஜெனீவா பிரேரணைக்கு எதிரர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதாரவு தெரிவித்தும் இன்று காலை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


மன்னார் வாழ் தமிழ் பேசும் மக்கள் என்ற பெயரில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
காலை 11 மணியளவில் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து பஸார் வீதியூடாக சென்று மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.

பின் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை ஏற்பாட்டுக்குழுவினர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் அவர்களிடம் கையளித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது  நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.