பக்கங்கள்

பக்கங்கள்

5 மார்., 2013


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி நாடாளுமன்ற வளாகம் முன்பு திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்தும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலைக்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும் சென்னையில் டெசோ அமைப்பு
சார்பில் மு.க. ஸ்டாலின் தலைமையில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஜெனீவா தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்று கோரி திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகம் முன்பு உள்ள காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், செல்வ கணபதி, ஜெபத்துரை, வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி. கூறும்போது, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும், பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு இதை கொண்டு வருவதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம் என்றார்.