பக்கங்கள்

பக்கங்கள்

30 மார்., 2013


புனே வாரியர்ஸுக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை பெருமையாக நினைக்கிறேன் : மெத்தியூஸ்

புனே வாரியர்ஸ் அணித் தலைவராக இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புனே வாரியர்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டமை குறித்து மெத்தியூஸ் கூறுகையில்,
'புனே வாரியர்ஸ் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையாக நினைக்கிறேன். என் மீது அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றியுடையவனாக இருந்து இவ் அணியை வழிநடத்துவேன் என்றார்.
மெத்தியூஸின் நியமனம் தொடர்பில் சகாரா அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் லிட் நிர்வாக இயக்குனர் கூறுகையில்,
'மெத்தியூஸ் தலைவராக நியமிக்கப்பட்டது அணியிலுள்ள மூத்த வீரர்கள் மற்றும் நிர்வாகத்தின் ஒருமதித்த கருத்தாகும்.
அணியில் உள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் வீரர்களின் கருத்தின்படி அவரை தேர்வு செய்தோம்.
அவரது தலைமைப்பொறுப்பில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இவரது தேர்வு அனைத்து வீரர்களுக்கும் மகிழ்ச்சி. நாங்கள் சரியாக வெளிநாடு மற்றும் உள்ளூர் வீரர்களின் திறமைகளைக் கொண்டு போட்டியில் வெற்றி பெற கடுமையாக முற்சிப்போம்'' என்றார்.