பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2013

தமிழக சட்டசபை தீர்மானத்தினூடாக தமிழீழத்திற்கான மிக முக்கியமான பாய்ச்சல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 

மாணவர்கள் உட்பட பலர் தெளிவாக அமெரிக்க தீர்மானத்தின் பின்னுள்ள போதாமை, அனைத்துலக விசாரணை, பொது வாக்கெடுப்பு என்பவற்றை சுட்டி போராட்டம்
நடத்தியிருந்தாலும் ஒரு முக்கியமான விடயத்தை சுட்ட மறந்திருந்தார்கள். அதாவது "பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும்" என்று..

அதாவது மனித உரிமை பேரவையில் அமெரிக்கா "அனைத்துலக விசாரணை தேவை" என்பதை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும் அதை ஒரு பெரிய வெற்றியாக நாம் கருத முடியாது.

ஏனென்றால் எல்லாத் தீர்மானங்களும் ஐநா வின் பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தை பெறுவதை பொறுத்தே அதன் வெற்றி தீர்மானிக்கப்படும்.

தமிழக அரசு முன்வைத்த தீர்மானத்தில் " ஐநாவின் பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருப்பது நமக்கெல்லாம் இன்ப அதிர்ச்சியை தந்திருக்கிறது.

தமிழக அரசின் பின்நின்று இதை வரையறுத்த ஆளுமைகள் யாரென்று தெரியவில்லை. ஆனால் தெளிவானவர்கள் பலர் பின்னிற்கிறார்கள் என்பது புலப்படுகிறது. இது கூடுதல் மகிழ்வை தருகிறது.