பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


மத்திய அரசில் இருந்து விலகிய தி.மு.க.வின் 5 அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கையளித்தனர
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது அகில இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அரசில் பதவி வகிக்கும் திமுக அமைச்சர்கள் 5 பேரும் தமது ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில், 2 முக்கிய திருத்தங்கள் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றது. அத்துடன் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தது. காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. 2004-ம் ஆண்டு முதல் இருந்து வந்தது. மத்திய மந்திரிசபையில் தி.மு.க. மந்திரிகள் இடம் பெற்றனர்.
9 ஆண்டு கால உறவு முறிந்து விட்டதை தொடர்ந்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை ஜனாதிபதியிடம் தி.மு.க. முறைப்படி கொடுத்தது.
டெல்லியில் இரவு 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. பிரதிநிதிகள் சந்தித்து கடிதத்தை நேரில் வழங்கினார்கள்.
அடுத்த கட்டமாக தி.மு.க. மந்திரிகள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (நிதி), எஸ். ஜெகத்ரட்சகன் (தொழில், வர்த்தகம்), எஸ்.காந்திசெல்வன் (சுகாதாரம், குடும்ப நலன்), ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.
கபினெட் மந்திரி பதவி வகிக்கும் மு.க.அழகிரி, இணை மந்திரி நெப்போலியன் ஆகியோர் மட்டும் மதியம் 12.30 மணி வரை ராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை. பின்னர் சரியாக 1.30 மணியளவில் இருவரும் பிரதமரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.