பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2013

உலகளவில் சுற்றுலாத்துறையில் சுவிட்சர்லாந்து தொடர்ந்து முதலிடம்
உலகப் பொருளாதார அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று உலக அளவில் சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறையில் முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்நாடு தன் முதலிடத்தைத் தக்க வைத்து கொண்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நிலப்போக்குவரத்து, விடுதி மற்றும் அதன் பணியாளர்கள், இயற்கையழகு, ஆரோக்கியமான சுற்றுச் சூழல், உயர்தரப் பாதுகாப்பு ஆகியவை சுற்றுலாவை ஊக்குவிக்கின்றன. இந்நிலையில் விலைவாசி உயர்வு மட்டும் சுற்றுலாவுக்கு எதிராக உள்ளது.
இதை தொடர்ந்து சுற்றுலாத்துறை குறித்து 140 நாடுகளில் ஆய்வு நடத்தி வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரச் சரிவைச் சரிசெய்யவும் சுற்றுலாத்துறை உதவுவதாகத் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா இரண்டாம் இடத்திலும், பிரான்ஸ் மூன்றாம் இடத்திலிருந்து ஏழாமிடத்துக்கும் இறங்கிவிட்டது.
மேலும் ஸ்பெயின் எட்டாம் இடத்திலிருந்து நான்காம் இடத்துக்கும், பிரிட்டன் ஏழாம் இடத்திலிருந்து ஐந்தாமிடத்துக்கும், கனடா ஒன்பதாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்திற்கும் உயர்ந்துள்ளது.