பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013


இலங்கைக்கு எதிரான போராட்டம் எதிரொலி! கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதப் போராட்டம், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.