பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013


இலங்கை அகதிகள் மரத்தில் ஏறி போராட்டம்! 
செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அங்கு போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களை கியூபிரிவு
போலீசார் கைது செய்து அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றக்கோரி நேற்று இலங்கை அகதிகள் 12 பேர் முகாம் வளாகத்தில் உள்ள மரக்கிளையில் ஏறி அமர்ந்துக்கொண்டு கூச்சலிட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செங்கை.தமிழரசன், நகர செயலாளர் அன்புசெல்வன் ஆகியோர் சிறப்பு முகாம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.