பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2013


மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் போட்டு பொலிஸ் அராஜகம்!

சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

அகில இந்திய வானொலி நிலையத்தைச் சுற்றிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விண் அதிரும் கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள்.

மத்திய அரசின் அலுவலகங்களை முற்றிலும் முடக்கும் போராட்டமாக இந்தப் போராட்டம் அமைந்திருந்தது.

இந்த அறவழிப் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதியில் வானொலி நிலையத்தை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்ட போது, மாணவர்கள் பொலிஸாரால் மிருகத்தனமாக நடாத்தப்பட்டனர்.

போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாணவியான திவ்யாவை பொலிஸார் குண்டுக் காட்டாகத் தூக்கி வானில் ஏற்றினர். அப்போது திவ்யா பொலிஸ் அராஜகம் ஒழிக என்று கதறினார்.

மற்றைய மாணவர்களையும் பொலிஸார் தகாத வார்த்தைகளினால் திட்டினர்.

தமிழக அரசின் ஏவலின் பெயரில் பொலிஸ் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி மிருகத்தனமாக நடந்து கொண்டமையானது மாணவர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இனி முழுவீச்சில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் முன்னெடுக்கப்படும் என மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறினார்.