பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2013

மட்டக்களப்பு, காரைதீவில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சாயி பஜனையில் இசைக்கருவியை வாசித்துக்கொண்டிருந்த ஒருவர் திடீரென அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த 65 வயதுடைய சீவரெட்னம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையில் காரைதீவு சாயி சமித்தியில் பஜனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பஜனையில் டொல்கி வாசித்துக்கொண்டிருந்த நபர் திடீரென வாசித்துக்கொண்டிருந்தவாறே சரிந்து வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். இச்சம்பமானது இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.