பக்கங்கள்

பக்கங்கள்

21 மார்., 2013

அமெரிக்காவின் முன்னைய தீர்மான வரைபிலிருந்து இந்தியா "உருவிய" வசனங்கள்.

01. "வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும்." எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.

02. "வெளியக விசாரணை" என்பது "உள்ளக விசாரணை" என மாற்றப்பட்டிருக்கிறது.

03. "பொருத்தமான சர்வதேச விசாரணை " எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.

04. இலங்கை அரசை "வலியுறுத்துகிறோம்" எனும் சொல் "ஊக்கப்படுத்துகிறோம்" என மாற்றப்பட்டிருக்கிறது.

05. "தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பதனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம்" எனும் பந்தி முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.