பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2013

நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்து வரும் சோமவங்சவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டுவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


சோமவங்ச அமரதுங்க நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளார். அவர் தற்போது வயதாகியுள்ளதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவுமே புதிய தலைமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்படும் வீழ்ச்சியே இந்த திடீர் தீர்மானத்துக்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் பதவிக்காக ரில்வின் சில்வா, அனுர சேனாநாயக்க மற்றும் விமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் பரீசிலனையில் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.