பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2013


இலங்கை மக்கள் முன்னோக்கி செல்ல, போர்க்குற்ற விசாரணைகள் அவசியம்!- பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை இலங்கைக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் நாடாளுமன்ற உதவி செயலாளரும் பொதுநலவாய மற்றும் வெளியுறவு அமைச்சருமான அலிஸ்டர் பேர்ட் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தங்காலையில் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையின் விசாரணைகள் தாமதமாவது குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிமன் டான்சுக் இலங்கை பயணத்தின் பின்னர் சமர்ப்பித்த அறிக்கை மீதே அமைச்சர் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படவேண்டியது அவசிமானதாகும்.
இலங்கையில் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையின்போது நீதி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதியான விசாரணை அவசியமானதாகும்.
அத்துடன் இறுதிப்போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம். இல்லையேல் இலங்கை மக்களுக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கி செல்வதில் கஸ்ட நிலையை தவிர்க்கமுடியாது என்று அலிஸ்டர் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.