பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2013


அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா போட்டியிட தீர்மானம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மந்திராலோசனையின் போது மகிந்தவின் முக்கிய அமைச்சர்கள் சிலர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டதாகவும், இவ்வாறான பலமிக்க இரண்டாவது சக்தியை உருவாக்குவதற்கான தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் விமல் வீரவன்சவின் அனுசரணை கொண்ட இணையமான லங்கா சீ நியுஸ் இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை வேட்பாளர்களாக நிறுத்துவது என்றும், இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியுடனும் கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளது.