பக்கங்கள்

பக்கங்கள்

28 மார்., 2013


மாணவர்களுக்கு  ஞானதேசிகன் வேண்டுகோள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாண வர்கள் கிழித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கும்,
மாணவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சென்னையில் இன்று நிருபர்களிடம், ’’காங்கி ரஸ் கட்சிக்கு எதிராக மாணவர்களைச் சில சமூக விரோத சக்திகள் தூண்டிவிடுகின்றன. மாணவர்கள் என்ற போர்வையில் சமூக விரோத சக்திகள் காங்கிரஸ் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தின. மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கல்லூரிகளுக்குத் திரும்ப வேண்டும்’’என்று கூறினார்.