பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013


வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமெரிக்க தூதுவராய அதிகாரியிடம் காணாமல் போன உறவுகளைத்தேடும் சங்கத்தினரால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது
. காணாமல்போனோர் உறவுகளைத் தேடும் சங்கத்தினால் காணாமல் போன உறவுகளைத் தேடித் தருமாறு கோரி கொழும்பில் நேற்று நடாத்தப்பட இருந்த

போராட்டத்திற்கு செல்வதற்காக வடபகுதியில் இருந்து சென்ற மக்களை வவுனியாவில் வைத்து இடைமறித்த பொலிஸார் தொடர்ந்தும் செல்லவிடாது தடுத்தனர் இதன் காரணமாக காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் பாரிய ஆர்பாட்டபேரணி ஒன்றினை நேற்று நடத்தியிருந்தனர். இந்த போராட்டத்தின் போது காணாமல்போன உறவுகளினால் கையளிக்கப்பட்ட மகஜர் இன்று மாலை காணாமல்போனோர் உறவுகளைத் தேடும் சங்கத்தினருக்கும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதுவராலய அரசியல் விவகார அதிகாரி ஜேக்கப் கிறிஸ்கி இடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
சந்திப்பு தொடர்பாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தெரிவிக்கையில்,
இன்று இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற நிலஅபகரிப்பு, காணாமல் போதல் தடுத்துவைத்தல் தொடர்பாகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை, மற்றும் போருக்கு பின்னரான அரசின் வேலைத்திட்டங்கள் தொடாபாக தாம் அவர்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும் ஜெனிவா மனித உரிமை தொடாபான விவாதத்தின் போது தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து அமெரிக்க தெளிவான தீர்மானத்தினை கொண்டு வருவதுடன் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.
இதேவேளை அமெரிக்க தூதுவராலய அரசியல் விவகார அதிகாரி தெரிவிக்கையில்,
இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தொடந்து கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் உள்ள ஏனைய நாடகளுடன் இணைந்து நீதியான முறையில் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன் காணாமல் போனவர்கள், தடுப்பில் உள்ளவர்கள் அவர்களின் உறவுகள் கூறுகின்ற செய்திகளை கேட்கின்ற போது அவர்களுடை வேதனை புரிகிறது எனவே இது தொடர்பாக தாம் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், மன்னார் மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளரும் பங்குத்தந்தையுமான செபமாலை அடிகளார், மற்றும் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.