பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2013


ஜெனீவாவில் இலங்கை தொடர்பான பிரேரணை வரைபு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக கையளிப்ப
இலங்கை தொடர்பில் ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தாக்கல் செய்யவுள்ள  பிரேரணையின் வரைபு ஜெனீவாவில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெசட் இணையத்தளம் இதனை தெரிவித்துள்ளது.
பேரவையின் உறுப்பினர்களுக்கு ஆவணங்கள் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த பிரேரணை வரைபு, பேரவையில் சமர்;ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்’ என்ற தலைப்பில் இந்த பிரேரணை வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வாதவிவாதங்களின்போது இந்த பிரேரணை வரைபு மாற்றங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர், சர்வதேச சுயாதீன விசாரணைக்கு இந்த யோசனையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கையில் ஆட்கள் காணாமல் போதல், சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள், பேச்சு சுதந்திரம், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நீதித்துறையின் மீது நடத்தப்படும் அடக்குமுறை என்பன தொடர்பில் யோசனையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.