பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2013


சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கைது!

 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சங்கானையைச் சேர்ந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.நாவற்குழிப்பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் 19 வயதுடைய சங்கானையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உறவினர்களால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடந்த 12 ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து அன்றைய தினமே இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும் சந்தேகநபர் சிறுமியின் அக்காவினுடைய கணவரின் தம்பி எனவும்  முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.