பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013


ராமதாசுக்கு 15 நாள் சிறை : வேலூர் சிறையில் அடைக்க முடிவு

மரக்காணம் கலவரம் தொடர்பாக விசாரனை கோரி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார் ராமதாஸ். காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (30.4.2013)காலை கைது செய்யப்பட்டார்.


இன்று மாலை அவரை 15 நாள் காவலில் வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அவரை வேலூர் சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வன்னியர்கள் - தாழ்த்தப்பட்டவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாமக தரப்பில் 1500 மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

இதனைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கேட்ட போது மாவட்ட ஆட்சியர் அலுவலம் எதிரே தர முடியாது. அதற்குப் பதிலாக மதியம் இரண்டு மணிக்கு தொடர்வண்டி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கினர். பின்னர் அதையும் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று காலை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த தைலாபுரத்தில் இருந்து மருத்துவர் ராமதாஸ் நூறு கார்கள் பாதுகாப்புக்கு வர விழுப்புரம் சென்றார். அங்கு தொண்டர்கள் ஆயிரம் பேருடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது போலிஸார் ராமதாஸ் உட்பட பாமக தொண்டர்களை கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இன்று மாலை ராமதாஸுக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கப்ப