பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2013


மட்டக்களப்பு ஆரையம்பதியில் 16வயது சிறுவன் செலுத்திய லொறியில் சிக்கி 4வயது சிறுவன் பலியாகியுள்ளார்
 இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி கண்ணகியம்மன் வீதியில் லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
போது அந்த லொறியை சுத்தம் செய்த 16வயது சிறுவன் யாருக்கும் தெரியாமல் லொறியை இயக்கிய போது லொறியின் பின்னல் நின்ற 4வயது சிறுவன் லொறியில் சிக்கி மரணமானார். லொறிக்கும் வீட்டு மதிலுக்கும் இடையில் நசிந்து இச்சிறுவன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இறந்த 4வயது சிறுவன் லொறி உரிமையாளர் அகிலேஸ்வரனின் மகன் அச்சுனன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.