பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2013


ஈழத்தமிழரை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி வீட்டை இன்று முற்றுகையிடுகிறது மே 17 இயக்கம்
இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன.
இந்த போராட்டங்களை ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது.
கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு தந்துள்ள உரிமை. போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் அவதூறு பரப்பி வரும் சுப்பிரமணியன் சாமியை  வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழர் அமைப்புகளை சட்டம், ஒழுங்கின் எதிரிகளாகவும் குற்றப்பரம்பரையினராகவும் பிரசாரம் செய்கிறார்.
தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதே அவரது வேலையாக இருக்கிறது.
இலங்கை தமிழர்களை அழித்தொழிக்கும் ராஜபக்சவோடு இணைந்து சர்வதேச அரங்கில் சதிவேலையில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு இந்திய அரசும் உறுதுணையாக இருக்கிறது.
இத்தகைய தமிழர் விரோத சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு மையிலாப்பூரில் உள்ள அவது வீட்டை முற்றுகையிடுகிறோம்.
அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறோம் என்று திருமுருகன் கூறினார்.