பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2013


மும்பை கட்டட விபத்து : 2 உரிமையாளர்கள் கைது
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான தானேவில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டு வந்த 7 அடுக்குமாடி கட்டடம் ஒன்று கடந்த வியாழக்கிழமை
மாலை முற்றிலும் இடிந்து விழுந் தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி, அங்கு கட்டடப் பணிகளில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்கள் 72 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

அவர்களில் 7 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் உட்பட 33 ஆண்கள் மற்றும் 22 பெண்களும் அடங்குவர் மேலும் 36 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருசிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. 
இதற்கிடையே, தங்களால் கட்டப்பட்டு வந்த 7 அடுக்குமாடி கட்டடக் குடியிருப்பு சீட்டுக்கட்டு போல் சரசரவென சரிந்து, அங்கு பணியாற்றிய கூலித் தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளுக்கி¬யே சிக்கி உயிரி ழந்ததை அறிந்து தலைமறைவான கட்டுமான நிறுவனத்தின் 2 உரிமையாளர்களை மும்ப்ரா போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
 இந்நிலையில், அந்த கட்டுமான நிறுவன உரிமையாளர்களான ஜமீல் குரேஷி மற்றும் சலிம் ஷேக் ஆகிய இருவரையும் இன்று மாலை மும்ப்ராவில் உள்ள கவுசாவில் போலீசார் கைது செய்தனர்.