பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013


தேனி : 2 வாலிபர்கள் உயிரோடு எரித்துக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகேயுள்ளது கரிச்சிபட்டி கிராமம். இங்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) என்பவர்கள், பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து பார்த்துள்ளனர். 


இதனையடுத்து அவர்களை பிடித்த பெண்களின் உறவினர்கள், அடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் இன்று இருவரும், தங்களை தாக்கியவர்கள் சிலரை கத்தியால் தாக்கியுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் அடக்கம். பின்னர் இருவரும் அங்கிருந்த ஒரு வீட்டில் மறைந்துள்ளனர்.
 இதனையறிந்த காயமடைந்தவர்களின் உறவினர்கள், அவர்களை வீட்டோடு தீவைத்து எரித்தனர். இதில் இருவரும் கருகி பலியானார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.