பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013


தடைமீறு - பாமகவினருக்கு ராமதாஸ் உத்தரவு
கடந்த 25 ந்தேதி பாமக மாமல்லபுரத்தில் சித்திரை நாள் குடும்ப விழா கூட்டம் நடத்தியது. இதில் கலந்துக்கொள்ள பாமகவினர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் போது மரக்காணத்தில் பாமகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரத்துக்கு காரணம் விடுதலை சிறுத்தைகள் தான் என பாமக நிறுவனர் ராமதாஸ்சும், பாமக தான் காரணம் என தொல்.திருமாவளவன் அவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். வி.சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் திமுக தலைவர் கலைஞர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உட்பட பிற கட்சியினரை சந்தித்து கலவரம் பற்றி விளக்கினார்.

தமிழக முதல்வர் ஜெ சட்டமன்றத்தில் 110ன் கீழ் கலவரம் பற்றி அறிக்கை வாசித்தார். அதில் பாமக, வி.சி இரண்டு தரப்பும் மீதும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், கலவரத்துக்கு நீதிவிசாரணை வேண்டும் என கேட்டு மே1ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஒவ்வொரு மாவட்ட பாமக நிர்வாகிகளும் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது அனுமதி தரவில்லையாம். இதனை ராமதாஸ்க்கு தகவலாக சொல்லியுள்ளனர்.

அவர் அனுமதியில்லையென்றாலும் பரவாயில்லை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் என கூறியுள்ளார். அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என காவல்துறை தரப்பில் இருந்து சொல்லப்பட்டுள்ளது.

இன்று விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால் ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாh என்பது குறிப்பிடதக்கது.