பக்கங்கள்

பக்கங்கள்

29 ஏப்., 2013


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பொதுச்சபை செயற்குழு கூட்டம்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) விசேட பொதுச்சபைக் கூட்டம் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தர்த்த்தன் அவர்களின்
தலைமையில் வவுனியா கோயில்குளத்தில் (28.04.2013) இன்றுகாலை 9.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இதன்போது நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துரைத்த அனைவரும்இ நமது கட்சிகளிடையே இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தினை வலியுறுத்திப் பேசினர். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினர்.
மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிஇ தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பதிவினை விரும்புகின்ற கட்சிகளுடன் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்கான அங்கீகாரத்தையும்; பொதுச்சபை இதன்போது வழங்கியது.
மாலை 3மணியளவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது பொதுச்சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை விரிவாக ஆராய்ந்து தீர்மானத்திற்கு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியது.