பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2013


நர்சு புகார்: போலீஸ் நிலையத்தில் பாதிரியார் சரண்
வியாசர்பாடி சாஸ்திரி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் (31). மாதவரத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் பாதிரியராக இருந்தார். இவரது
உறவினருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனிப்பதற்காக போரூரைச் சேர்ந்த நர்சு ஆரோக்கிய இருதய கலையரசி அடிக்கடி வந்து சென்றார்.

அப்போது பாதிரியார் அந்தோணி ஜோசப்புக்கும் நர்சு கலையரசிக்கும் தொடர்பு ஏற்பட்டது. நர்சை பல இடங்களுக்கு அழைத்து சென்று பாதிரியார் அந்தோணி ஜோசப் உல்லாசம் அனுபவித்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நர்சு கலையரசி வற்புறுத்தினார். அதற்கு பாதிரியார் மறுத்தார்.
இது பற்றி நர்சு கலையரசி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணம் செய்து கொண்டதால் பாதிரியார் பொறுப்பில் இருந்து அந்தோணி ஜோசப் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் அந்தோணி ஜோசப் வரதட்சணையாக நகை-பணம் கேட்டு நர்சு கலையரசியை கொடுமைப்படுத்தினார். அவரது குடும்பத்தினரும் சித்ரவதை செய்தனர். இது பற்றி கலையரசி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கணவர் அந்தோணி ஜோசப், மாமனார், மாமியார் மீது புகார் செய்தார். 
இந்த புகார் மனு எம்.கே.பி. நகர் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து அந்தோணி ஜோசப் எம்கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் கோவி மனோகரன் முன்பு சரண் அடைந்தார். அவரிடமும் நர்சு கலையரசியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.