பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2013


சென்னை மாநகரப் பேருந்து மோதி 3 வயது குழந்தை பலி: கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சாலை மறியல்
சென்னை பாரிமுனையில் மாநகரப் பேருந்து மோதியதில் குழந்தை உயிரிழந்தது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மங்கிலால் என்பவரின் மகன் பரத் (வயது 3) என்பது தெரியவந்துள்ளது, பேருந்து நிலையத்தில்
காத்திருந்தபோது மங்கிலால் குடுத்தினர் மீது பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் மங்கிலால் மற்றும் மற்றொரு குழந்தையும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,

விபத்து ஏற்பட்டதையடுத்து பேருந்தின் கண்ணாடிகளை அங்கிருந்த பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.