பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2013


லாரி அதிபர் படுகொலை: சென்னை ராயபுரத்தில் பரபரப்பு
சென்னை திருவெற்றியூர் கல்யாணசெட்டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வின்செண்ட் (46). தொழிலதிபர். இவரது தந்தை அற்புதராஜ். வின்செண்ட் திருவெற்றியூரில் இவிபி என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வந்தார். இவரிடம் ஏராளமான
கண்டெய்னர் லாரிகளும், டிப்பர் மற்றும் மணல் லாரிகளும் உள்ளன. நூற்றுக்கணக்கானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இவருக்கு திருவெற்றியூரில் எஸ்டிடி என்ற பெயரில் சொந்தமாக லாரி ஷெட் உள்ளது. அதில் வைத்து அலுவலத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் 23.04.2013 செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணி அளவில் ராயபுரம் காவல்நிலையத்தில் இருந்து, நூறு மீட்டர் தூரமுள்ள டிஎன்பிசி பேங்க் அருகே இவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதன் எதிரே அரசு டாஸ்டாக் மதுபானக் கடையும் உள்ளது. வின்செண்ட் பயணம் செய்த அவரது மோட்டார் சைக்கில் அவரது உடலுக்கு அருகிலேயே ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் பைக்கில் வந்த வின்செண்ட்டை மடக்கி வெட்டி கொலை செய்தார்களா அல்லது மதுபான கடைக்கு சென்றவரை வழிமறித்து கொன்றார்களா என்பது தெரியவில்லை. பொதுமக்கள் கொடுத்த தகவ-ன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வின்செண்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்- மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 2009ம் ஆண்டு வின்செண்ட்டை இதே முறையில் கொலை செய்ய முயற்சி நடந்து அதில் இருந்து இவர் தப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
வின்செண்ட்டின் கொடூர மரணம் வடசென்னை டிரான்ஸ்போர்ட் அதிபர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ரவுடிகளின் மாமுல் கேட்பு தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும், தொழில் போட்டியும் காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.