பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 28வது ஆட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்
அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகமாக சர்மா (73), தெண்டுல்கர் (54) ரன்களும் எடுத்தனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்படடது. இதனை அடுத்து பேட்டிங் செய்து விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயம் செய்த இலக்கை தகர்த்தது. 
டெல்லி அணி 17 ஓவர்களில் ஒரு விட்கெட்டை இழந்து 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெயவர்த்தனே 59 ரன்கள் எடுத்தார். சேவாக் தனது ஆபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தி 57 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார்.