பக்கங்கள்

பக்கங்கள்

1 ஏப்., 2013


அந்தமானுக்கு தப்பி ஓடிய பவர்ஸ்டார்?...
செக் மோசடி வழக்கில் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டதால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமியிடம் 2008ம் ஆண்டு ரூ.2 லட்சம் கடன் வாங்கினார்.
ஒரு ஆண்டுக்கு பின்னர் பணம் இல்லாத செக்கை கொடுத்து பொன்னுசாமியை மோசடி செய்தார்.
இது தொடர்பாக நாமக்கல் கோர்ட்டில் பொன்னுசாமியின், மேலாளர் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் 2009ம் ஆண்டு நீதிமன்றம் பிடி விராந்து பிறப்பித்தது.
அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ம் திகதி பவர் ஸ்டார் சீனிவாசன் பிணையில் வெளி வர முடியாதபடி பிடி விராந்து பிறப்பித்து நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் ஜோதி உத்தரவு பிறப்பித்ததுடன், மார்ச் 26ம் திகதிக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளியாக கருதப்படுவார் என உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நாமக்கல் பொலிசார் சென்னை சென்று சீனிவாசனை தேடிய போது, அவர் அந்தமானுக்கு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் பொலிசார் கூறுகையில், நடிகர் பவர் ஸ்டார் மீது காவல் நிலையத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்படவில்லை. செக் மோசடி தொடர்பாக அவர் மீது பிரைவேட் கேஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர்.
தற்போது நீதிமன்றத்தில் கடுமையான உத்தரவு பிறப்பித்த பின்னர், பொலிசாரிடம் வந்துள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.