பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2013


கூட்டமைப்பில் மாவை- ஈபிடிபியினில் தவராசா வடக்கு தேர்தல் களம் தயார்!!

எதிர்வரும் வடக்கு மாகாண தேர்தலினில் கூட்டமைப்பு சார்பினில் பெருமளவிலான முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவைசேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்று  கொழும்பிலிருந்து வெளியாகும் 'லங்காதீப' பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனாலும் இந்த முடிவை இன்னும் சில வாரங்களின் பின்னரே கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் என்றும் இன்னும் சில வாரங்கள் செல்லக் கூடுமெனவும் லங்கா தீப தெரிவித்துள்ளது

 இதனிடையே ஈபிடிபி தனது முதன்மை வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசாவினை நிறுத்த முடிவு செய்துள்ளது.முன்னதாக டக்ளஸ் தேவானந்தா களத்தினில் குதிக்கலாமென எதிர்பார்க்கப்பட்ட நிலையினில் தோல்வியேற்படலாமென்ற அச்சத்தினில் அம்முடிவை மாற்றிக்கொண்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் அரச தரப்பு தனது முடிவினை இது வரை அறிவித்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.