பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2013

னித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் பாதுகாக்கவுமே அரசாங்கம் விரும்புகின்றது. சாதாரண குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இவை மனித உரிமை மீறல்களாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதேனும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார்.

உதயன் பத்திரிகையின் மீதான தாக்குதல் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும் கடந்த வாரம் அமெரிக்கா வெளியிட்டிருந்த மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.