பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2013

இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணப் பட்டியல் : இம்மாத இறுதிக்குள் வெளியாகும்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் எவ்வளவு? என்ற பட்டியல் இம்மாத
இறுதிக்குள் வெளியாகும் என வருமான வரித்துறை (சர்வதேச வரிவிதிப்பு) டைரக்டர் ஜெனரல் புரொமிளா பரத்வாஜ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக புதுடெல்லியில் அவர் கூறியதாவது:- 

கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் கணக்கில் வராத வருமானம் மற்றும் சொத்துக்களின் மீதான ஆய்வை அரசு நடத்தியுள்ளது. நிதித்துறையை சேர்ந்த 3 அமைப்புகள் இந்த ஆய்வினை மேற்கொண்டன. 

சட்டபுறம்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் கருப்புப் பணத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே கருத்தொற்றுமையை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது. 

இந்தியர்களில் யார், யார்? எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கி வைத்துள்ளார்கள் என்ற பட்டியல் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.