பக்கங்கள்

பக்கங்கள்

26 ஏப்., 2013


சிவகீர்த்தா பிரபாகரனை மட்டு. மாநகர சபைக்கு விசேட ஆணையாளராக நியமிக்க நடவடிக்கைகள்
கலைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னாள் மேயர் சிவகீர்த்தா பிரபாகரன் அவர்களை மட்டு. மாநகர சபைக்கு விசேட ஆணையாளராக நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியவருகின்றது.
சிவகீர்தா-பிரபாகரன் மட்டு மாநகரத்திற்கு மேயராக இருந்த காலத்தில் மாநகரத்தில் அபிவிருத்திகள் மந்தகதியில் மெற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தமக்கு வேண்டியவர்களுக்கு மாத்தரம் வியாபார அனுமதிகளும் குறிப்பாக, கல், மண் ஏற்றும் அனுமதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது இவ்வாறு இருக்க மீண்டும் இந்த அம்மணியினை மாநகர சபைக்கு பொறுப்பாக அனுமதித்தல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மாநகர மக்கள கூறுகின்றனர்.
சிவகீர்த்தா பிரபாகரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்று பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாறி தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைப் பிரதிநித்துவப்படுத்தி தமது சேவைகளை மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.