பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2013

புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது சென்னை
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த 3ம் திகதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 9 அணிகள் விளையாடி வருகிறது.
நேற்று வரை 30 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. போட்டி தொடக்கத்தில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் பின்தங்கிய நிலையில் இருந்தது.
தற்போது சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று இருக்கிறது.
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்று உள்ளன. ஆனால் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூர் (+0.47), ஐதராபாத் (-0.10) ஆகிய 2 அணிகளையும் பின் தள்ளிவிட்டு சென்னை அணி (+0.64) முதலிடத்தை பிடித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் மும்பையிடம் தோற்றது. அடுத்து பஞ்சாப், பெங்களூர் ஆகிய அணிகளை வீழத்தியது. அடுத்த ஆட்டத்தில் புனேயிடம் தோற்றது.
அதன்பின் டெல்லி, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியனாக வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.