பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2013


நடிகை ரேவதி - சுரேஷ் மேனன்
விவாகரத்து பெற்றனர்!
நடிகை ரேவதியும், டைரக்டர் சுரேஷ் மேனனும் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
நடிகை ரேவதிக்கும், கேமராமேனும், டைரக்டருமான சுரேஷ் மேனனுக்கும், 1986ல் திருமணம் நடந்தது. இருவரும் சேர்ந்து, புதியமுகம் எனும் ஒரு படத்திலும் நடித்துள்ளனர். 


இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்து கோரி, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள, குடும்ப நல கோர்ட்டில், கடந்த ஆண்டு, அக்டோபரில், இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். 
ஆறு மாதங்களுக்குப் பின், இவ்வழக்கு, நீதிபதி, ராஜா சொக்கலிங்கம் முன், ஏப்ரல் 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. நடிகை ரேவதியும், சுரேஷ் மேனனும் ஆஜராயினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை, 22.04.2013க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார். அதன்படி இன்று இருவருக்கும் பரபஸ்பர விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.