பக்கங்கள்

பக்கங்கள்

13 ஏப்., 2013


சென்னை காவல் நிலையத்தில் தீக்குளித்த பெண் உயிருக்கு போராட்டம்
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போலீசில் தீக்குளீத்த பெண் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.   விசாரணைக்கு அழைத்து வந்த சுனிதா என்பவர் பதிவேடு அறையில்
தீக்குளித்தார்.  உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சுனிதா கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு வந்தவர் தீக்குளித்த சம்பவத்தால் எம்.ஜி.ஆர். நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
பாதிரியார் சேகருடன் சுனிதாவுக்கு உள்ள தொடர்பு குறித்து காவல் ஆணையரிடம் புகார்  இருந்தது.  இதனால் கிறிஸ்தவ பாதிரியார் சேகரையும் அழைத்து வந்து விசாரணை செய்தது எம்.ஜி.ஆர்.  நகர் போலீஸ்.