பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013


அழகிரி வீட்டில் கனிமொழி : தீவிர ஆலோசனை
தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கனிமொழி இன்று 7.4.2013 ல் மதுரை சென்றார்.

விமானம் மூலம் காலை 8.30 மணிக்கு மதுரை சென்ற அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்வு கொடுக்கப்பட்டது.   
பேரவை பொருப்பாளர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்றார்.  அடுத்து, மறைந்த பிடிஆரின் வீட்டிற்கு சென்றார்.  பின்னர்,  டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரி வீட்டிற்கு சென்றார்.  
அழகிரி வீட்டில் சாப்பாடு முடித்துவிட்டு,  இரண்டறை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். குடும்ப பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த ஆலோசனை நடைபெற்றதாக பேசப்படுகிறது.