பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2013


சங்ககாரவிற்கு எதிர்த்து ஐதராபாத்தில் போராட்டம்!

 தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்கள அரசினைக் கண்டிக்கும் வகையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கை வீரர் சங்ககர ஐதராபாத் ஐ.பி.எல். அணியின் தலைவராக இருந்து வருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத்தில் இன்று (24) திடீர் போராட்டம் நடந்தது. ஐதராபாத்தில் ஐ.பி.எல். வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல் முன் இந்த போராட்டம் நடந்தது.
உடனடியாக பொலிஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டது எந்த அமைப்பு என்ற விபரம் தெரியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது. பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.